வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு : அரிசி விற்பனை செய்வதற்கு தடை
-பதுளை நிருபர்-
இன்று திங்கட்கிழமை காலை பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சி படுத்தப்படாமை தொடர்பான குற்றச்சாட்டில் நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எதிர்வரும் 27 ம் திகதி வழக்கு
தொடரப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை நான்கு விற்பனை நிலையங்களுக்கும் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
