வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்‌ : 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசம்

-பதுளை நிருபர்-

பதுளை சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.