வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்

 

-எஸ். சினீஸ் கான்-

 

பல வருடங்களாக சமூக சேவை செய்துவரும் நாபீர் பவுண்டேஷனின் செயற்திட்டத்தின் கீழ்  வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு  உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்  தொடர்ச்சியாக நடைபெற்று  வருகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தின் எட்டாவது கட்டம்  சம்மாந்துறை பிரதேசத்திற்கு உற்பட்ட வீரமுனை பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட

குடும்பங்களுக்கான  உணவுப் பொருட்கள் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு நாபீர்‌ பவுண்டேஷனின் சம்மாந்துறை வீரமுனை தலைவர் கோவிந்தசாமி  தலைமையில்  நடைபெற்றது

குறித்த நிகழ்வில் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீரின் பாரியார் M.L.சனாஸியா  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக  உணவு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்