வருடாந்த கட்டின பிங்கம நிகழ்வு
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா சுமனாராம விகாரையில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பௌத்த மக்கள் புடைசூழ புத்த பெருமானின் திரு உருவ சிலை தாங்கிய பாரவூர்தியில்இந் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 6.30 க்கு மஸ்கெலியா ஆலய சுற்று வட்ட வீதியூடாக மஸ்கெலியா தபாற்கந்தோர் வீதி 7 ஆம் வீதி பிரதான வீதி 2 ஆம் வீதியூடாக சாமிமலை வீதி ஹட்டன் வீதி நோட்டன் வீதியூடாக சென்று மக்கள் தரிசனம் முடித்து மீண்டும் சுமனாராம விகாரையை வந்து அடைந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சுமனாராம விகாரையில் புத்தபிரானுக்கு மலர் பூஜைகள் நடைபெற்ற பின்னர் பௌத்த மத மதகுருமாருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
