
வருடாந்த ஒன்றுகூடல் – பிரியாவிடை விழா
-சம்மாந்துறை நிருபர்-
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு தனியார் மண்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் வருடாந்த இடமாற்றத்தில் செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் நுளம்பு களத் தடுப்பு உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் கலை நிகழ்வுகள் மற்றும் உரைகளும் இடம்பெற்றன. அத்துடன் சேவையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், கணக்காளர் திருமதி எம்.எம். உசைனா, சிரேஸ்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட அனைத்து சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கும் கலந்து கொண்டனர்.





