
வருடத்தின் முதல் 7 மாதங்களில் 122 பில்லியன் ரூபா வருமானம்
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் மதுவரித் திணைக்களம் 122 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் வழங்குவதன் மூலம் மாத்திரம் 1,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
