வரித் திணைக்கள அதிகாரிகள் போல் வேடம்: பணம் கொள்ளை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் போன்று வேடமணிந்து வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வரிப்பணத்தை பெற்றுக் கொள்வதாக மோசடிக் குழுவொன்று தொடர்ச்சியாக முறைப்பாடுகளைப் பெற்று வருவதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் இருந்து இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உள்நாட்டு இறைவரி அதிகாரிகள் வரி செலுத்துவோரிடம் சென்று வரிப்பணத்தை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் மட்டுமே வைப்பிலிடுமாறு அறிவுறுத்துவார்கள் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்