
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம்
-யாழ் நிருபர்-
இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் 24 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று, முருகப் பெருமான் உள்வீதியூடாக வலம் வந்து, தேரில் ஏறி வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நல்லூர் கந்தனை தரிசித்து ஆசிகளை பெற பக்தர் கோடிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவானது கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரதோற்சவம் இடம்பெற்றதுடன், நாளை 2ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மாத்திரமல்லாது தென்னிலங்கையில் இருந்து அதிகளவு வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கையினை நல்லூர் சூழலில் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
