வரலாற்று சாதனை படைத்த மொஹமட் வாசிம்
சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக மூவாயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை மொஹமட் வாசிம் படைத்துள்ளார்.
ஓமன் அணிக்கெதிரான போட்டியின் போது அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
முன்னதாக குறித்த சாதனை ஜோஸ் பட்லர் வசமிருந்தது.
இந்தநிலையில் ஜோஸ் பட்லரின் சாதனையை மொஹமட் வாசிம் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.