வரலாற்றில் முதலாவது பணியை நிறைவு செய்துள்ளோம் – மணிவண்ணன் பெருமிதம்

-யாழ் நிருபர்-

 

மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் யாழ்.மரபுரிமை மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து தலைமை உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்காக மரபுரிமைகளை பாதுகாக்கும் மையத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறுவியிருந்தோம்.

எமது அமைப்பினை நிறுவும்போது பலர் யோசித்தார்கள் இந்த அமைப்பு நிறுவியதுடன் அதன் செயற்பாடுகளும் முடிந்து விடும் என நினைத்தவர்களுக்கு எமது வரலாற்றின் முதல் பணியை செய்து முடித்துக் காட்டியுள்ளோம்.

சங்கிலியன் தோரணை வாயிலை யாழ். மரபுரிமை மையம் புனரமைக்க வேண்டும் என யோசித்தபோது யாரிடம் மிதி கேட்பது எம்மை நம்பி நிதி தருவார்களா என்ற சந்தேகங்கள் இருந்தது.

வைத்திய கலாநிதி ரவிராஜ் மரபுரிமை பாதுகாப்பு அமைப்பின் உப தலைவராக இருக்கின்ற நிலையில் நாங்களே முன் உதாரணமாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைப்போம் அதற்கு நான் நிதி தருகிறேன் என்றார்.

அவரின் பெருந்தன்மையும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் தமிழர் வரலாற்றின் எச்சமான சங்கிலியன் தோரண வாயிலை புனரமைக்க முடிந்தது.

வைத்திய கலாநிதி ரவிராஜ் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் எமது மண்ணிலே நின்று மக்களுக்கு சேவையை வழங்கிய ஒருவர்.

எமது மண்மீதும் எமது வரலாறுகள் மீதும் ஆழ்ந்த சிந்தனை உள்ள ஒருவர் என்ற நீதியில் அவரின் விடாத முயற்சியும் அர்ப்பணிப்பும் சங்கிலியன் தோரண வாயிலை பொதுமக்கள் பார்வையிடக் கூடிய வகையில் திறந்து வைப்பதற்கு உதவியாக இருந்தது.

அதேபோன்று மாந்திரிமனை யமுனா ஏரி ஆகியவற்றையும் புனரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது மரபுரிமை மையம் திட்டங்களை வகுத்துள்ள நிலையில் அதற்கு பாரிய நிதி பங்களிப்புத் தேவை.

மந்திரி மனையைப் புனரமைக்க வேண்டுமானால் சுமார் ஆறு தொடக்கம் எட்டு கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிதியினை பெறுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன் வர வேண்டும்.

அவே அரசாங்கம் செலவழிப்பதற்கு நிதி பற்றாக்குறை என்கிற நிலையில் எமது மரபுரிமைகளை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு எடுத்த செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்