வரலாற்றில் முதன்முறையாக 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ள தங்கத்தின் விலை!

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.