வரலாற்றில் முதன்முறையாக பெண் வைத்தியர்கள் அதிகரிப்பு!
வரலாற்றில் முதன்முறையாக ஆண் வைத்தியர்களை விட பெண் வைத்தியர்கள் பிரித்தானியாவில் தற்போது பணிபுரிந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 164,440 பெண்கள் வைத்தியர்களாகப் பயிற்சி உரிமத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளனர், மேலும் 164,195 ஆண்கள் வைத்தியர்களாகப் பயிற்சி உரிமத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
பிரித்தானியாவில் சமீப காலமாக வைத்திய துறையை கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
