வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கிருமித் தொற்று காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்