வயிற்றுவலியால் வயோதிபர் எடுத்த தவறான முடிவு

நுவரெலியா – இராகலை பகுதியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆணின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இராகலை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொண்னையா நாகஸ்வரன் (வயது – 61) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மிக நீண்ட நாட்களாக வயிற்று வலியென அவதிப்பட்டு வந்த நிலையில் தனது மூத்த மகனுடன் நேற்று திங்கட்கிழமை காலை வைத்தியசாலைக்கு சென்று மருந்து பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய இவர் தனது வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் தற்கொலை தான் செய்துள்ளாரா என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.