வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க
வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க
வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க
📌அடிக்கடி உங்கள் வயிறு வீங்கி உங்களை இம்சை படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் கடுமையான வாயு தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு வாயு பிரச்சனையானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
📌அதில் முக்கியமான ஒன்று நாம் உண்ணும் உணவுகள் தான். செரிமான மண்டலத்தில் வாயுக்கள் உருவாகி சரியாக வெளியேற்றப்படாமல் போகும் போது, அந்த வாயு அப்படியே சிக்கி, வயிற்று வீக்கம், உப்புசம், கூர்மையான வலியுடன் பிடிப்புகள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
📌இப்படியான வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலியில் இருந்து விடுவிடுக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக ஒருசில ஆயுர்வேத பானங்கள் இப்பிரச்சனையில் இருந்து உடனே விடுவிக்கும். நீங்கள் கடுமையான வாய்வு தொல்லையால் அவதிப்படும் போது இந்த பானங்களை குடித்தால், உடனடி நிவாரணம் பெறலாம். இப்போது அந்த பானங்கள் எவையென்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
மல்லி டீ
🍃சமையலில் நல்ல மணத்திற்காக சேர்க்கப்படும் மல்லி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. குறிப்பாக மல்லி வயிற்றில் தேங்கியுள்ள வாயுக்களை எளிதில் வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். அதற்கு மல்லியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பின் குடிக்க வேண்டும்.
இஞ்சி டீ
🍃ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை தான் இஞ்சி. மருத்துவ குணம் அதிகம் கொண்ட இஞ்சி செரிமான மண்டலத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. ஆயுர்வேதத்தின் படி, உணவிற்கு பின் ஒரு டம்ளர் இஞ்சி டீயை குடித்து வந்தால், அது செரிமானத்தைத் தூண்டி, வாயு உருவாவதைக் குறைத்து, வயிற்று உப்புசத்தில் இருந்து விடுவிக்கிறது. மேலும் வயிற்றில் வாயு தேங்கியிருந்தால், அதை எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.
சீரக நீர்
🍃சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் தான் சீரகம். இந்த சீரகமும் ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள். இதுவும் செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவும். இப்படிப்பட்ட சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்த, அந்நீரை செரிமான பிரச்சனையின் போது குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம் மற்றும் வயிற்று உப்புசமும் தடுக்கப்படும்.
புதினா டீ
🍃செரிமான பிரச்சனைகளில் இருந்தும், வாயு தொல்லைகளில் இருந்தும் விடுபட உதவும் மற்றொரு அற்புதமான ஆயுர்வேத பானம் தான் புதினா டீ. எனவே அஜீரண கோளாறு மற்றும் வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், புதினா டீயைக் குடித்து வர, செரிமான பாதையில் உள்ள தசைகள் தளர்வடைந்து, சிக்கிய வாயுவை எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.
வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்