வயல்வெளியில் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா – தேவகுளம் பகுதியில் வயல்வெளியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா (வயது – 23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் மோட்டார்சைக்கிள், பாதணி மற்றும் தலைக்கவசம் என்பன காணப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.