
வயநாடு நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு
இந்தியாவின் கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இந் நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்நூற்று எண்பதை கடந்துள்ளதுடன் மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.
இதேவேளை மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
