வனவிலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை நாளை

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை நாளை புதன்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மர அணில் மற்றும் மயில் உள்ளிட்ட விலங்குகள் அடங்குகின்றன.

மேலும், நாடு முழுவதும் உள்ள காட்டுப்பகுதிகளை தவிர்ந்து விவசாய நிலங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் சுமார் 12 மில்லியன் குரங்குகள் இருப்பதாக குறித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்