வனஜீவராசிகளின் கணக்கெடுப்பு அறிக்கை இன்று

பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்குகள் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் வைத்து விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்

அவ்வாறு கிடைக்கப்பெறும் அறிக்கை முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கையாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது. இது குறித்த கணக்கெடுப்புகள் மீண்டும் நடத்தப்படும்.

வனஜீவராசிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் வனஜீவராசிகள் தொடர்பான உரிய கணக்கெடுப்புகள் அவசியம் எனவும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்