வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா
மட்டக்களப்பு வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா எதிர்வரும் ஜீன் மாதம் 5 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறு ஆரம்பமாகும் ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா ஜீன் மாதம் 9ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்குளிர்த்தியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்த அடியார்கள் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக வருகை தந்து அன்னை கண்ணகி அம்பாளின் அருள் பெற்று செல்லுமாறு பரிபாலன சபையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.