![](https://minnal24.com/wp-content/uploads/2022/04/277533410_1257715838051137_70486773675722908_n.jpg)
வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசபையால் வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
உள்ளுர் ஆதரவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பிரதேசத்தில் வணிகத் தொழிலில் ஈடுபடுவோர் அதிகளவு நன்மை பயக்க வாய்ப்புள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேசபை தவிசாளர் சி.சர்வானந்தம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர், தேவப்பிரதீபன் ஆகியோர்கள் இதற்கான அடிக்கல்லினை வைபவ ரீதியாக நாட்டி வைத்தனர்.