வந்தாச்சு நவராத்திரி 2023

நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாப்படுகிறது. உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் ஒன்று சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்த நவராத்திரி. நவராத்திரியின் போது 9 நாட்கள் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. நவராத்திரியிலிருந்து சுப காரியங்களும் தொடங்குகின்றன. இந்து நாட்காட்டியின்படி, ஷரதிய நவராத்திரி இந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் தொடங்குகிறது, இது அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறும். மத நம்பிக்கைகளின்படி, ஷரதிய நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது நல்லது. இந்தஇ ஒன்பது நாட்கள் துர்கா தேவியை வழிப்பாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நேரடி அர்த்தம் ஒன்பது இரவுகள். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தேவியின் அவதாரத்துடன் தொடர்புபடுத்தி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் வருகிறது. இது இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். இந்த நேரத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி இருக்கும். இதனால் பகல் ஒளி என்பது குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். இதனால் வடக்கு பகுதியில் குளிர் பரவும். சூரிய ஒளி பூமியில் படும் நேரம் குறையும். இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வர வழி வகுக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ள படுகின்றன.

நவராத்திரி புராண கதை :
இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.

எனவேஇ மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. 15 நாட்கள் நீண்ட போருக்குப் பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினர்.

நவராத்திரி 2023 எப்போது?
சாஸ்திரங்களின் படி, சித்ரா நட்சத்திரம் அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 4:24 மணிக்கு தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 6:13 வரை இருக்கும். மறுபுறம், அபிஜீத் முஹூர்த்தம் அக்டோபர் 15 அன்று காலை 11:04 முதல் 11:50 வரை இருக்கும்.

அதனால் இந்த ஆண்டு ஷரதியா நவராத்திரி அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை இருக்கும் . இம்முறை நவராத்திரி ஒன்பது நாட்கள் நடைபெறுவது சிறப்பு. நவராத்திரி சனி, செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கும் போது அம்மன் குதிரையில் வலம் வருவார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்