வத்தளையில் கொள்ளை

வத்தளை, குடாதன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை காலை சமையல் எரிவாயு கொள்கலன்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளமை சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் நியாயமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் .

எனினும் நேற்று காலையில் இடம்பெற்ற திருட்டு கமராக்களில் பதிவாகியுள்ளது,  இவர்களை இனம்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பட்சத்தில் 0777105705 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வத்தளை பொலிஸாருக்கோ அறிவிக்கும்படி குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்