
வட்ஸ்ஆப் குழுவில் கருத்து மோதல் : துப்பாக்கியுடன் வந்த வகுப்புத்தோழன்!
நண்பர்கள் இடையேயான கருத்து மோதல் காரணமாக துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவமொன்று நீர்கொழும்பு தலாதுவ பகுதியில் இன்று புதன்கிழமை பதிவானது.
வட்ஸ்ஆப் குழுவில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்த சம்பவத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஒரே பாடசாலையில் கல்வி கற்ற 53 வயதான இரு நண்பர்கள் இடையே இந்த கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை துப்பாக்கியை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
