வட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தளர்த்தத் தீர்மானம்

ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்தத் தடையைத் தளர்த்தும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஈரானுக்கான புதிய ஜனாதிபதி கடந்த ஜுலை மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்போது, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இணையத்தளச் செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே, ஈரானின் புதிய ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்