வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும்

-யாழ் நிருபர்-

யாழ்.வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும் நேற்று திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க நடை பவனி இடம்பெற்று, அதன்பின்னர் பாடசாலை வளாகத்தில் உள்ள சரஸ்வதி திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, பொங்கல் பூசைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி, இறை வழிபாடுகளுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது, பாடசாலையின் நிறுவுனரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் வதனி தில்லைச்செல்வன், விருந்தினர்கள், ஸ்தாபகரின் உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வட்டு இந்து வாலிபர் சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்