வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு
சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வானது நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது.
இதன்போது ஆசிரியர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு மாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்களும் கலைநிகழ்ச்சிகளை ஆற்றினர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பதில் அதிபர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.





