
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் – விண்ணப்பங்களுக்கான இறுதி காலம் நீடிப்பு
வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10 ஆவது கட்டத்துக்கான விண்ணப்பங்களை கோருவதற்கான காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு விண்ணப்பத்துக்கான கால அவகாசத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் 2025 ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
