வட்டவளையில் பெண் ஒருவர் குளத்தில் மீட்பு
-மஸ்கெலியா நிருபர்-
இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வட்டவளை பொலிஸ் பிரிவில் உள்ள லொனெக் தோட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க கணவரை இழந்த நான்கு குழந்தைகளின் தாய் பழனிவேல் ராஜம்மாள் லொனெக் தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட உள்ளார்.
இது குறித்து வட்டவளை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட உள்ளது என வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
