வடிவேல் சுரேஷிற்கு புதிய நியமனம்

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலக அபிவிருத்தி இணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, , பதுளை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கான இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.