வடக்கு ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம்!

17,880

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும், என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாகக் கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கக்கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தினூடாக ரயில் சேவையை முன்னெடுக்க முடியாது என ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக வடக்கு ரயில் மார்க்கத்தில் நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sureshkumar
Srinath