வடக்கு மாகாண புதிய ஆளுநர் உத்தியோகபூர்மாக கடமைகளை பொறுப்பேற்றார்
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம், வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், இராணுவத்தினர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடமாகாண திணைக்கள, அமைச்சுக்களின் செயலாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராகவும், சுங்கத்திணைக்களப் பணிப்பாளராகவும், வடமாகாண ஆளுநராகவும், தேர்தல் அணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்