
வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் இந்த நன்கொடை பொருட்கள் கையளிக்கப்பட்டன.
ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பின் ஊடாக சர்வதேச இந்து கலாசார ஆலோசகரான கலாநிதி இரத்னசாமி ராமேஸ்வரன் என்பவரால் ஜேர்மன் நாட்டிலிருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைகள் இலங்கையின் பல பாகங்களில் பகிர்ந்தளிக்கப்படுகிறன.
அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

