
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மழை !
நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் நாளை மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
