
வடக்கு புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை புகையிரத திணைக்களம் வடக்கு மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி வடக்கு புகையிரத மார்க்கம் (Northern Line) நாளை செவ்வாய்க்கிழமை முதல் முழுமையாக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளை முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை ‘யாழ் தேவி’ புகையிரதம் தனது சேவையை மீண்டும் ஆரம்பிக்கின்றது.
இந்த புகையிரத பயணத்திற்கான முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளை பயணிகள் இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
