வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாற்றம்

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான தொடருந்து போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், கொழும்பிலிருந்து மஹவ வரையிலும், தனியே அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையிலும் தொடருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக முன்னதாக இடைநிறுத்தப்பட்ட பல தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
அதன்படி, கொழும்பு தொடக்கம் திருகோணமலை வரையான இரவு நேர அஞ்சல் தொடருந்து இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான புளதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (Pulathisi Intercity Express) தொடருந்தும் இன்று முதல் தனது தினசரி சேவையை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு இடையிலான உதய தேவி எக்ஸ்பிரஸ் (Udaya Devi Express) தொடருந்தும் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.