
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம்: ஏற்க மறுத்தார் சுமந்திரன்
-திருகோணமலை நிருபர்-
இன்றைய தினம் வருகை தந்த சுமந்திரன் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் மகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சிபார்சுகளை ஏற்றுக் கொண்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாட சென்ற வேளையில் உதாசினப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில்
சுமந்திரன் ஓர் ஜனாதிபதி சட்டத்ததரணியாக இருந்தாலும் அவர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி என்பதை மறந்து இவ்வாறு நடந்து கொண்டமை அனைவரது மத்தியிலும் விரக்தியினை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் குறித்த துண்டு பிரசுரத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தமை இவ்வறிக்கையில் கீழ் குறிப்பிடப்படும் 11 சிபார்சுகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
• வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும்
• உணர்ச்சிகரமான அரசியல் என்பது நாம் எமது சுய தேசிய உணர்ச்சிகளுக்கு தீனி போடுவது மாத்திரமேயாகும். இது தமிழ் தேசத்தை ஏனைய சமூகங்களிடமிருந்து அந்நியப்படுத்துவதுடன் தமிழ் தேசம் தனது நியாயாதிக்கத்தை சர்வதேச அளவில் இழக்கவும் காரணமாகின்றது. தமிழ் தேசிய அரசியலை அறிவுபூர்வமான, நவீன அரசியல் கொள்கைகளுடன் கூடிய அரசியலாக பரிணாமிக்கச் செய்யவேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.
• வடக்கு கிழக்கு பிரதேசத்தை தமது தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கும், அதேபோல் இப்பிரதேசத்தை தமது பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மையினராக பல காலமாக எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய கடப்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. எந்தவொரு சந்தர்பத்திலும், தமிழ்த் தேசிய அரசியலையும் தழிழ் மக்களையும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து பிரிக்காதவாறு கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
• குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை வெளிப்படைத் தன்மையுடன் பேணவேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது
• வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் காலங்காலமாகக் காணப்பட்டுவரும் “சமூக ஊனங்களான” யாழ் மேலாதிக்கவாதம், பிரதேசவாதம், மத ரீதியான வெறுப்புணர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள், சாதி அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட உறுதியான தமிழ்த் தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அத்தகைய ஒரு மக்கள் சமூகத்தால் மாத்திரமே தனது அரசியல் இலக்குகளை அடைய முடியும். இதை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அடிப்படைக் கொள்கையாக ஏற்கவேண்டும்.
• சிங்கள இனவாத அடக்குமுறைகளின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ்மக்களின் வழித்தோன்றல்கள் வடக்கு கிழக்கின் மக்கள் வாழ்வியலுடன் பிணைந்துவிட்டனர். இந்தப் பிணைப்பில் சிறு கீறல்கூட ஏற்படுத்தாவண்ணம் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.
• தமிழரசுக் கட்சி அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிலும் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கேற்புக்கு கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. தழிழ் அரசியல் தளத்தில் முற்போக்கான ஜனநாயகமான சிந்தனைகள் பரிணமிக்காது தமிழ்த் தேசிய அரசியல் தளம் முடங்கிக் கிடப்பதற்கு இது முக்கிய காரணமாகும். தமிழ்க் கட்சிகள் தமது அங்கத்துவ எண்ணிகையை உயர்த்தி மக்கள் மயப்பட்ட கட்சிகளாக தமது கட்சிகளை மாற்ற வேண்டும்.
• புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்வேறு சக்திகளும் தமிழ் அரசியலில் தமது செல்வாக்கைச் செலுத்த முயல்கின்றனர். இவர்களின் ஆளுகைக்கு உட்படாது, வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் வேரூன்றி தமது உரிமைக்காக அன்றாடம் போராடிக்கொண்டு வாழ்ந்து வரும் மக்களின் நலன்களையே தமிழ் அரசியல் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும்.
• அரச இனவாதத்துக்கு சரணடையாத கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்.
• தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளவும் பலப்படுத்த வேண்டும். ஆபிரிக்க தேசிய காங்கிரசில் காணப்பட்ட கூட்டுப் பலமே தென்னாபிரிக்க மக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த உண்மையை தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்றாக வேண்டும்.
• வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையான, “ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” என்பதை தமது இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக வடக்கு கிழக்க ஒருங்கிணைப்பக் குழுவினர் மேற்படி விடயத்தினை அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களிடமும் கொண்டு செல்லும் வகையில் இன்றைய தினம் திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 17 ஆவது மாநாடு திருகோணமலையில் நடைபெற்ற வேளையில் அங்க வருகை தந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மற்றும் கெபாதுக் குழு ஊறப்பினர்னளயிடையே இவ.;விடயம் தாங்கிய அறிக்கையினை பிரசுரித்திருந்தது.

