
வடக்கு கிழக்கில் கன மழைக்கான எச்சரிக்கை
மத்திய வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
ஈரப்பதம் நிறைந்த காற்று இன்று திங்கட்கிழமை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்குள் வருகைதரும்.
எனவே இன்று இரவு முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 14, 15 மற்றும் 16ம் திகதிகளில் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

