வடக்கின் புதிய ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு?
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம், மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா பதவியில் இருப்பதற்கு முன்னர் ஒருதடவை வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வகித்தவர். ஆனால் இவரது செயற்பாடுகளில் மக்களுக்கு அதிருப்தியே ஏற்பட்டிருந்தது.
அந்தவகையில் புதிதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பொலிசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்