வசந்த முதலிகே உள்ளிட்ட எட்டு பேரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, பௌத்த பிக்கு உள்ளிட்ட 8 பேர் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பொலிஸாரை தாக்கியமை கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு கண்டி பிரதான வீதியில் தற்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக பொது மாணவ சங்கத்தின் தலைவர் கெலும் முதன்நாயக உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று வியாழக்கிழம இரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதால், பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே முறன்பாடு ஏற்பட்டது.

இதன்போது, காயமடைந்த இரண்டு பொலிஸார் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்