வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்தி தொடர்பில் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை
வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். இவ்வாறு பகிரப்படும் செய்தி மோசடி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாகவும் அதேநேரம் கையடக்கத் தொலைபேசிகளின்
மென்பொருள்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.