வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 300.71 முதல் ரூ. 298.77 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 318.51 முதல் ரூ. 316.44 ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 295. 70 முதல் ரூ. 297.68 ஆகவும்  விற்பனை விலை ரூ. 318 முதல் ரூ. 316 ஆக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ. 298 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 315 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்