வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது.

இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளை மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல்பிராந்தியத்திற்கு மேலாக காணப்படும்.

இதனால் இலங்கையின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்