வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது அதே பகுதியில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடலில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணிக்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால் குறித்த கடல் பகுதிகளும் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதுடன் கடற்பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, இலங்கையின் தென்கிழக்கே உள்ள ஆழ்கடல் பகுதிகள் சில வேளைகளில் 65 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, மேற்கு – மத்திய வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் தென்கிழக்கில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்