வங்காளவிரிகுடா நோக்கி திரும்பியுள்ள காற்று சுழற்சி: மழை குறைவடைய வாய்ப்பு

அம்பாந்தோட்டை பகுதிக்கு 300கிமி தொலைவில் தென்கிழக்காக நீடித்துவந்த காற்று சுழற்சியானது அதன் சுழற்சிப்பாதையில் இருந்து தெற்கு நோக்கி விலகிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக நாட்டின் கிழக்கு, ஊவா, தெற்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை இன்று திங்கட்கிழமை காலை முதல் குறைவடைந்துள்ளது.

மேலும் இது தொடர்ந்தும் வலுக்குறைந்த சுழற்சியாகவே அடுத்துவரும் 24 மணிநேரங்கள் தற்போதுள்ள அதே கடற்பரப்பில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இதன் நகர்வுப்பாதை மீண்டும் மேற்கே அரபிக்கடலை நோக்கியே காணப்படும் என்பதனால் அடுத்த கட்ட மழைவீழ்ச்சி தொடர்பான உறுதிப்பாடுகள் தொடர்ந்தும் ஆய்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க