
வகுப்பறைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
-பதுளை நிருபர்-
பண்டாரவளை பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் இன்று புதன் கிழமை அதிகாலை இரு வகுப்பறைகளை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
தரம் ஒன்று மற்றும் தரம் 2 மாணவர்கள் கற்கும் வகுப்பறைகளே சேதமடைந்துள்ளதுடன், தளபாடங்களும் சேதம் அடைந்துள்ளது.
குறித்த பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்து கொடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
