லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர், வாகன விபத்தின் பின்னர் சட்டத்தரணி உள்ளிட்ட இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்