
லொஹான் ரத்வத்தவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற அனுமதி
சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி, கட்டுகஸ்தோட்டையில் வைத்து கடந்த 31ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று திடீர் சுகவீனம் காரணமாக லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் மருத்துவ சிகிச்சைக்காக ரத்வத்தவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நுகேகொட பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
