லொறி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்

அம்பலாங்கொட காலி வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெட்டியகொட பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரே  உயிரிழந்துள்ளார்.

அளுத்கமவில் இருந்து மெட்டியகொட நோக்கிச் சென்று கொண்டிருந்த டீஜே ஒலிபெருக்கிகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உறங்கியதால் எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த ஏனைய இருவரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.