லொறி உந்துருளி மோதி விபத்து : ஒருவர் பலி!
-பதுளை நிருபர்-
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டை செல்லும் வீதியில் 3 ஆம் கட்டைப் பகுதியில் மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டைக்கு செல்லும் உந்துருளி லொறி ஒன்றில் மோதியதில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது உந்தருளியின் சாரதியான திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் இருந்த காணியகொட சொரபொர மஹியங்கனை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த மற்றுமொரு நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் லொறியின் சாரதியான அத்தாதுவ சொரபொர பகுதியை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த பாடசாலையில் ஆசிரியராகப் கடமையாற்றும் 46 வயதுடைய நபர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்